
முதல் பாகம் போலவே ராஜ்கிரண் இந்த பாகத்திலும் விஷாலின் அப்பாவாக நடிக்க திமிரு பட ஷ்ரேயா ரெட்டி போல இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய விஷால் சண்டக்கோழி டூ படம் இரண்டாயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறினார். மேலும் சண்டக்கோழி சீரீஸ் ஹாலிவுட்டின் பிரபலமான காட்பாதர் சீரீஸ் போல புகழ் பெற்றுள்ளதாக கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஏற்கனவே லிங்குசாமி இப்படித்தான் தனது அஞ்சான் படத்தை மவனே மாசு என்றெல்லாம் பேசி படம் படு மொக்கையானது அனைவருக்கும் மைண்டில் வந்து சென்றது.
click and follow Indiaherald WhatsApp channel