ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன்  (Frozen ) படம்.
Image result for Frozen 2 dubbing artist

தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில்  மிகப்பெரும் தமிழக பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளது பெரும் வலிமையாக அமைந்துள்ள இத்தருணத்தில்,  மேலும் மூன்று பிரபலங்கள்  படத்தில் இணைந்துள்ளனர். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும்  தளபதி விஜய்யின் சர்க்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாப்பாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி படத்தில் எல்சாவின் தமக்கை பாத்திரமான அன்னாவிற்கு குரல் தந்திருக்கிறார்.



முதல் பாகத்தை விட மிரட்டும் விஷுவல்களும், வியக்கும் திரைக்கதையும், ஃபேண்டஸி உலகை கண்முன் கொண்டு வரும் பற்பல விசயங்கள் நிறைந்திருக்கும் ஃப்ரோசன் 2 (Frozen 2 ) ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. உலகம் முழுக்க நவம்பர் 22 ல் வெளியாகும் இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது. முதல் பாகத்தை விட மிரட்டும் விஷுவல்களும், வியக்கும் திரைக்கதையும், ஃபேண்டஸி உலகை கண்முன் கொண்டு வரும் பற்பல விசயங்கள் நிறைந்திருக்கும் ஃப்ரோசன் 2 (Frozen 2 ) ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. உலகம் முழுக்க நவம்பர் 22 ல் வெளியாகும் இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: