சீயோல்:
வடகொரியாவின் அடுத்த அட்டூழியம் தொடர்கிறது... தொடர்கிறது... இப்போது கடலுக்கு அடியில் இருந்து...


என்ன விஷயம் தெரியுங்களா? கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தென்கொரிய எல்லையில் சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டதுதான் தற்போதைய அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது.


அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தி பார்த்துள்ளது. அப்போது போர்க்கப்பலில் இருந்த படி அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை கடலில் இருந்து சீறி விண்ணி்ல் பாய்வது பைனாகுலர் வாயிலாக பார்வையிட்டுள்ளார்.


இதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். வடகொரியாவின் இந்த அட்டூழியத்திற்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Find out more: