சென்னை:
சாதனை தமிழன்டா... என்று காலர் தூக்க வைத்துள்ளார் இவர். முதல்முறையாக வெளிநாட்டுக்காரரின் சாதனையை முறியடித்து கின்னசில் புதிய சாதனை படைத்துள்ளார் சென்னை வாலிபர்.


என்ன விஷயம் என்றால்... ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர்  ஒருவர் மாரத்தான் அயர்னிங் (அட அதாங்க... தொடர்ந்து நிறுத்தாமல்) மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் அயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


 இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மாரத்தான் அயர்னிங் சாதனைக்காக களம் இறங்கினார். எங்கே... சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில்.


இதை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்க... லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமான முறையில் செய்திருந்தார்கள். இருக்காதா பின்னே... தமிழன் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யும் போது நாம் அல்லவா பக்கபலமாக இருக்க வேண்டும்.


 சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார். அதாவது... வெளிநாட்டுக்காரர் செய்திருந்த கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தி விட்டார். 


இந்தியர் அதிலும் குறிப்பாக சென்னை வாலிபர் என்பது அனைவருக்கும் மட்டற்ற மகிழச்சி இல்லியா... ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து அயர்னிங் செய்து வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த சாதனை செய்ய இருக்கிறார்.


இந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதிமொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம். சூப்பர் இல்ல... மண்ணில் புதைக்கும் கண்களை மனிதர்கள் மனதில் விதைக்கலாமே...


మరింత సమాచారం తెలుసుకోండి: