சென்னை:
காவிரியில் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து முதல்வர் ஜெயலலிதா, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது.



Find out more: