தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார்.
நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு திரையுலகில் மகத்தான ஆண்டாக துவங்கி இருக்கிறது என்கிறார்.தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார்.
நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு திரையுலகில் மகத்தான ஆண்டாக துவங்கி இருக்கிறது என்கிறார்.
click and follow Indiaherald WhatsApp channel