இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். அதனால் புதிய ராணுவ தளபதி யார் என்பதுதான் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். பதவி காலம் முடிந்ததும் விலகப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். 


ரஹீல் ஷெரீப்பை பொறுத்தமட்டில் நாட்டு மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் இவர் ஓய்வு பெற்ற பின்னர் புதிய ராணுவ தளபதி எப்படி அமையப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகி உள்ளது.


லெப்டினன்ட் ஜெனரல் ஜாவத் இக்பால் ராம்டே பெயர் இந்த பதவிக்கு அடிப்படுகிறது. இவர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விருப்ப தேர்வாக அமையலாம் என்றும் சொல்கின்றனர். பார்ப்போம்... யார் வருகிறார்கள் என்று...


அதே நேரத்தில் லெப்டினன்ட் ஜெனரல்கள் ஜூபைர் ஹயாத், இஷ்பிக் நதீம் அகமது, காமர் ஜாவத் பஜ்வா ஆகிய 3 பேரும் பலத்த போட்டியில் உள்ளனர்.


ஆனாலும் ஜாவத் இக்பால் ராம்டேயின் குடும்பத்தினர் பல்லாண்டு காலமாக பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சியுடன் நீண்ட காலம் தொடர்பில் இருப்பதால், அவருக்கே ராணுவ தளபதி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் கூறுகின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: