
இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா ,ஷீலா ,சந்தான லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் , முன்னோட்டமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ‘U’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .குடும்பத்துடன் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது !
தொழில்நுட்பக்குழு :
கதை ,திரைக்கதை ,வசனம் இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்
இசை : D .இமான்
ஒளிப்பதிவு :நிரவ் ஷா
கலை இயக்கம் :வீர சமர்
படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்
சண்டைப்பயிற்சி : திலீப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது
click and follow Indiaherald WhatsApp channel