டிவிட்டரில் தற்சமையம் எங்கு பார்த்தாலும் #burnmealive தான். அனல் பறந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சொன்ன இந்த பர்ன் மி அலைவ் வார்த்தையை இப்போது மக்கள் சரமாரியாக விமர்சித்து டிவீட் போட்டுக் கொண்டுள்ளனர். டிவிட்டரில் "பர்ன் மி அலைவ்"தான் தற்போது  பரபரப்பான டிரெண்டிங்காக உள்ளது.


ரூபாய் நோட்டு ஒழிப்பு சமயத்தில், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி கூடுகையில் பேசுகையில், எனக்கு மக்களாகிய நீங்கள் 50 நாள் அவகாசம் கொடுங்க.


நிலைமை சரியாகவிட்டால் என்னை உயிரோடு வைத்துக் கொளுத்துங்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார். தற்போது பண ஒழிப்பு விவகாரம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்று ரபிஐ செய்திகள் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் சொன்ன வார்த்தையை டிரெண்டிங் செய்து கலாய்த்து வருகின்றனர் டிவிட்டராட்டிகள்.


Find out more: