'24' திரைப்படத்திற்கு பிறகு சூர்யா 'எஸ்-3' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை அடுத்து சூர்யா, 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில், ரஞ்சித் கூறிய இரண்டு கதைகளை சூர்யா கேட்டதாகவும், அதில் அவருக்கு குத்துச்சண்டையை கொண்டு உருவாகவுள்ள திரைப்பட கதை ஒன்று மிகவும் பிடித்ததாக தகவல் வந்துள்ளது.
இதனால் சூர்யா அடுத்து குத்துச்சண்டை வீரராக நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக 'இறுதி சுற்று' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.
இதே போலவே, சூர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படமும் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.