தனுஷ் இன்று தானே தன் சொந்த முயற்சியால் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பற்பல திறமைகளை காட்டி வருகிறார்.
சமீபத்திய ஒரு பேட்டியில் கூட ஒரு இயக்குனருக்கு தேவையான விஷயங்கள் தனுஷிடம் உள்ளது என பா.பாண்டி ஹீரோ ராஜ் கிரண் பாராட்டினார்.தனுஷின் அப்பாவும் கஷ்டபட்டு தான் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் என்று உயர்ந்திருக்கிறார். தனுஷை பற்றி ஒரு பத்திரிக்கையில் சில குடும்ப தகவல்கள் சமீபத்தில் வந்தது.

இதில் தனுஷ் அவரது அம்மா வயிற்றில் குழந்தையாக இருந்த காலம் அவரது குடும்பத்தில் மிகவும் வறுமையின் அடிமட்ட சூழ்நிலையாம்.

சொந்த கிராமத்திலிருந்து தேனிக்கு கால் நடையாக நடந்து வந்து பின் அங்கிருந்து ரயில் ஏறி நின்று கொண்டே வந்தெல்லாம் மிகுந்த கஷ்டமான சிரமப்பட்டிருக்கிறார் என கூறியதாக வெளிவந்துள்ளது.மேலும் அவர் தான் முதன் முதலாக இயக்கியுள்ள பா. பாண்டி படத்தை சித்திரை 1 ம் தேதி அதாவது புத்தாண்டு அன்று ( ஏப்ரல் 14) ல் வெளியிடுவதற்கு முதல் காரணம் கூட அன்று தன் அம்மாவின் பிறந்த நாள் என்பதால் மட்டுமே.
click and follow Indiaherald WhatsApp channel