ரியோடி ஜெனிரோ:
பர்ஸ்ட் டைமிலேயே தங்கம் வென்று தங்களின் வலிமையை நிரூபித்துள்ளது கொசாவோ. விஷயம் இதுதான்.


செர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடான பின்னர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசாவோவுக்கு 52 கிலோ ஜீடோ போட்டியில் முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இது எப்படி இருக்கு. திறமைன்னா... இதுஅல்லவா!


யூகோஸ்லேவியாவுடன் இணைந்திருந்தது ஒரு பகுதி கொசாவோ. யூகோஸ்லேவியா உடைந்த போது கொசாவோவை செர்பியா தனது நாட்டின் ஒரு அங்கமாக்கிக் கொண்டது. 


இதை ஏற்க மறுத்து கொசாவோ அல்பேனியர்கள் தனிநாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட 2008-ம் ஆண்டு கொசாவோ தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்டது. சர்வதேச சமூகமும் இதை அங்கீகரித்தது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 


தனிநாடான பின்னர் முதல்முறையாக இந்த ரியோ ஒலிம்பிக்கில்தான்  கொசாவோ பங்கேற்றுள்ளது. இதில் 52 கிலோ பிரிவு ஜீடோ போட்டியில் அந்த நாட்டின் வீராங்கனை கெல்மண்டி தங்கப் பதக்கம் வென்று தங்க மங்கை ஆகிவிட்டார். 


தங்கப்பதக்கம் வென்ற உடன் ஆனந்தக் கண்ணீருடன் இந்த நாளுக்காகத்தான் 4 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று சொல்ல அதை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த கொசாவோ மக்களும் கண்ணீர் விட்டனர். தற்போது கொசாவே நாடே செம கொண்டாட்டத்தில் உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: