சென்னை:


காமெடி, யதார்த்த நடிப்பு என்று ரசிகர்களை கவர்ந்தவர் தற்போது வில்லத்தனம் செய்ய போறாராம் என்று கோலிவுட் கோகிலாக்கா விஷயத்தை சொல்லியிருக்காங்க... என்ன தெரியுங்களா?


ஜிகர்தண்டா படத்தில் நடிப்பு சொல்லி கொடுப்பவராக வந்து செம காமெடியில் கலக்கியவர்... அடுத்த படமான ஜோக்கரில் தன் யதார்த்தமான நடிப்பால் கலக்கியவர் குரு சோமசுந்தரம்.


இவர்தான் அடுத்ததாக வில்லன் அவதாரம் எடுத்து அதகளம் செய்ய போறாராம். எந்த படத்தில் இப்படி என்கிறீர்களா? கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி நடிக்கும் 'யாக்கை' படத்தில் தான் குருசோமசுந்தரம் வில்லனாகி இருக்கிறார். நடிப்புக்கு ஏதுங்க... வில்லன், காமெடியன்... கலக்குங்க குரு... கலக்குங்க...


இந்த படம் புதிய பரிமாணத்தில் அவரை காட்டும் என்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்.



మరింత సమాచారం తెలుసుకోండి: