சென்னை:
வெட்டக்கூடாது என்ற தடைக்காக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் தமுமுகவினர். என்ன விஷயம் தெரியுங்களா?


பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை அறுத்து குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் மரபாகும். இதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை கண்டித்துதான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்கள் தமிழகத்திற்கு கொண்டு வந்து வெட்டப்படுவது சட்டப்படி குற்றம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராதா ராஜன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒட்டங்களை வெட்டுவதற்கு என்று பிரத்யேக அறுவைக் கூடங்கள் இல்லாததால் ஒட்டகங்கள் வெட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி இடைக்கால தடை விதித்தது.


வரும் 13ம் தேதி பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை அறுத்து குர்பானி கொடுக்க முடியாத நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை கண்டித்துதான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: