மும்பை:
தெறி... தெறித்த தெறிப்பில் பாலிவுட் மயங்கி கிடக்கிறதாம்... செம வசூலால் கல்லா நிரம்பி வழிந்தால் அப்புறம் மயங்காம என்ன செய்வாங்க... இப்ப இந்த படம் ஹிந்தி பேசப்போதுது... அப்ப யாரு ஹீரோன்னு சொல்லுங்க பார்ப்போம்.


தமிழ் தெறியில் விஜய்யின் ஸ்டைலிசான நடிப்பு படத்துக்கு செம அஸ்திவாரம். மீனாவோட குட்டி பொண்ணு நடிச்ச நடிப்பை யாருமே மறந்திருக்க முடியாது. வசூலில் சாதனை படைச்ச தெறியை மும்பை ஸ்டாருங்க பார்த்து இம்ப்ரஸ் ஆக... இதுல முந்திக்கிட்டது இயக்குனர் ரோஹித் ரெட்டிதானாம்.


இப்போ ரீமேக் உரிமை இவருக்கிட்ட இருக்காம். இவருதான் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’ படத்தை இயக்கியவருன்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை. உடனே ஷாரூக்கிடம் இவர் தகவல் சொல்ல அங்கிருந்து பச்சைக் கொடி ஆட்டப்பட்டதாம்.


அப்புறம் என்ன 2018ல்ம் தெறி ஹிந்தி ரீமேக் வெளியாகலாம்னு இப்பவே பரபரப்பான பேச்சு வர ஆரம்பிச்சுடுச்சு. அதெல்லாம் சரி... ஹிந்தியில ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் இருக்குமா?


Find out more: