ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் தமிழீழ போரில் இறுதிக்கட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா இலங்கை ராணுவத்தால் தாம் பட்ட கொடுர துயரங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக மே மாதம் 17, 18 தேதிகளில் அந்த இறுதிக்கட்டத்தில் என்னனென்ன நடந்தது என்பதையும் அங்குள்ள முகாம்களில் எப்படி நடத்தப்பட்டார் என்பதையும் அவர் கவலையோடு விவரித்தார்.
என்னை இலங்கை ராணுவம் பிடித்த செய்தி பிபிசி ஊடகத்தில் வந்த காரணத்தால் என்னை சித்திரவதை எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால், என்னை வைத்து தமிழ் மக்களை நன்கு வதைக்கலாம் என்பதால் என்னை உயிரோடு வைத்திருந்தார்கள். அவரை மே மாதம் 16ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் இனம் காண்கிறார்கள். பிறகு அவரையும் பிள்ளைகளையும் ரூபன் என்கிற போராளி ஆகியோரை மூன்று மணிநேரம் ஒரிடத்தில் இருட்டில் அடைத்து வைத்தனர்.. சுற்றுப்புறத்தில் பலவிதமன கத்தும் ஓலக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் தான் அவர் விசாரணை தொடங்கியது. திரும்பத் திரும்ப அவரிடம் மூத்த தலைவர் பிரபாகரன் குறித்து கேள்விகள் அடுக்கடுக்காக
கேட்கப்பட்டது.“நான் எனக்குத் தெரிந்தவற்றைச் நான் சொன்னேன். தெரியாதவற்றை, தெரியாது என்றே சொன்னேன். அவர்கள் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்த பிறகு, மற்ற மக்கள் தங்கியிருக்கும் வேறே முகாமுக்கு அனுப்பினார்கள்”. இவ்வாறு சசிரேகா கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel