சென்னை:
ஒன்றும் இல்லை... தொடர்ந்த பணிகளால்தான்... கவலை வேண்டாம்... இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுங்களா?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சுதீப்தான். இவர் தமிழில் நான் ஈ, புலி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர் கலந்துகொண்ட படப்பிடிப்பின் போது திடீர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடன் அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சுதீப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஓய்வில்லாத வேலையால் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. கொஞ்சம் ஓய்வு எடுத்தால் போதும். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் இவரது ரசிகர்கள் இவர் உடல்நலம் பெற்று திரும்ப பிரார்த்தித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்... அவர் நலம் பெற்று திரும்ப...