ஏசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சா உடன் மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார். அதேபோல் தற்போது பிரதமர் மோடி ஏசியான் 16வது மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் 14வது கிழக்கு ஏசியான் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதேபோல் ஆர்சிஇபி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் இருக்கிறார்.

ஆர்சிஇபி என்பது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு அமைப்பு ஆகும் . இதில் ஏசியான் குழுவில் உள்ள பத்து நாடுகள் மட்டும் 6 வல்லரசு நாடுகள் உள்ளது. தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, மியான்மர், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளது.
இன்று நடந்த ஏசியான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சா உடன் மோடி ஆலோசனை நடத்தினார். சரியாக 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இரண்டு நாட்டு உறவிகள் குறித்து இதில் பேசப்பட்டது. இரண்டு நாடுகள் இடையில் ஏற்றுமதி, இறக்குமதி புதிய ஒப்பந்தங்கள் செய்வது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டது . தாய்லாந்து நிறுவனங்கள் இதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel