'கபாலி' டீசர் வந்த பிறகு அதற்கு முந்தைய டீசர், டிரைலர் சாதனைகளை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ஆனாலும், விஜய் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் 'தெறி' டிரைலர் சாதனையை மறந்திருக்க மாட்டார்கள். 'கபாலி' படத்திற்கு இதுவரை டீசர் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டிரைலர் வெளியாகவில்லை. அதுவரை 'தெறி' டிரைலர் அதன் சாதனையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கலாம்.


மார்ச் 20ம் தேதி வெளியான 'தெறி' டிரைலர் 10 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வைகளையும், 1 லட்சம் ஹிட்ஸ்களையும் பெற்று புது சாதனையை யு டியூபில் படைத்தது. தொடர்ந்து பல சாதனைகளையும் புரிந்தது. அதிக லைக்குகள் பெற்ற டிரைலர், அதிக பார்வைகள் பெற்ற டிரைலர் என சாதனை மேல் சாதனை படைத்தது.


இப்போது 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. விஜய் நடித்த படங்களிலேயே அதிக யு டியூப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இப்படத்தின் டிரைலர் உள்ளது. இந்த சாதனையை தொடர்ந்து தக்க வைக்கப் போகிறதா அல்லது 'கபாலி' டிரைலர் வந்த பிறகு இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை 'தெறி' டிரைலரின் 1 கோடி சாதனை அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: