குஷி இயக்குனரோடு இணைந்து கும்மி அடித்து நடித்த நடிகை, சில வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இவர் நடித்த சிறிய பட்ஜெட் ஹிந்தி படம் ஒன்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், தற்போது ஹிந்தியில் படவாய்ப்பு வருகிறதாம். 


இந்த சமயத்தில், அவர் தமிழ் திரைப்பட வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்வதற்காக  தயாரிப்பாளர்களிடம் தற்போது சான்ஸ் கேட்டு அலைகிறாராம். தமிழில் எப்படியாவது மீண்டும் நடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இவர் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறாராம்.


இவரது முயற்சி வெற்றிபெறுமா அல்லது பிளாப் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: