தனுஷ் நடிப்பில் அடுத்து 'தொடரி', 'கொடி' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. இதையடுத்து அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், 'கொடி' திரைப்படத்தில், தனுஷ்  அண்ணன்-தம்பி என இரண்டு கெட்டப்களில் நடித்துள்ளார் என்பதை நாம் அறிந்தோம். ஆனால் தற்போது வெளிவந்த தகவலில்,  முதன்முறையாக இந்த படத்தில் தனுஷ் அப்பா-மகன் ரோலில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.


மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொடி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளிவருவதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: