தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தொடரி' திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். 


ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதியை, ஆகஸ்ட் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் தொடரி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், தம்பி ராமைய்யா, ராதா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். 


Find out more: