சந்தானம் நடித்த 'இனிமே இப்படி தான்', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்த ஆஷ்னா தற்போது பிரபு மற்றும் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்  நடிக்கும் 'மீன் குழம்பும் மண் பானையும்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 


இந்நிலையில், அவர் சந்தானம் நடிக்கவுள்ள ஒரு புது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள, பெயரிடப்படாத புது படத்தில், ஆஷ்னா தான் கதாநாயகியாம்.


ஏற்கனவே சந்தானம், ஆஷ்னா இருவரும் ரகசியமாக காதலித்து வருகின்றனர் என்று கிசுகிசுக்கள் எழுந்த நிலையில், தற்போது இவர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பது, நெருப்பில் பட்டாசு கொழுந்து எறிவது போல உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: