நடிகர் சிவகார்த்திகேயன் 'ரெமோ' திரைப்படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு புதுப்படம் நடிக்கவுள்ளார். இதையடுத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புது திரைப்படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. 


பெயரிடப்படாத இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


நயன்தாராவை தொடர்ந்து சமந்தா உடன் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் டூயட் பாட போகிறார்.... வாழ்த்துக்கள்....


Find out more: