குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமைய்யா தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இதை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


தேசிய விருது நடிகர் தம்பி ராமைய்யாவின் அம்மா பாப்பம்மாள், நேற்று மாலை காலமாகியுள்ளார். இவரது வயது 74. இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், இவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை இவரது உயிர் பிரிந்தது. இதனால் தம்பி ராமைய்யா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். 


மேலும் இவரது இறுதி சடங்கு, தம்பி ராமைய்யாவின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரம் ஊரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது. 


மேலும் பாப்பம்மாளின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் ஹெரால்டு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: