சென்னை:
ஒரு பெண்ணை ஒருதலையாய் காதலிக்கும் ஒருவன் அந்த பெண்ணை கொலை செய்ய அதை ஒருவன் பார்க்க... பின்னர் நடக்கும் சம்பவம்தான் படமாம். இது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே என்று யோசிக்கிறீர்களா?


சென்னையை பரபரப்பாக்கிய சுவாதி கொலை சம்பவம் போன்ற படம்தான் குற்றமே தண்டனை. இந்த படத்தை காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார்.


இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாக காதலிக்கும் ஒருவன் அவரை வீட்டிற்கே சென்று கொலை செய்கிறானாம். இதை பார்த்த சாட்சியான விதார்த் வம்பு எதற்கு என்று அமைதியாக இருக்க... குற்ற உணர்ச்சி அவரை படுத்தும் பாடு தான் குற்றமே தண்டனையாகி இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: