'கபாலி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த கலையரசன் தற்போது பெயரிடப்படாத ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜானகி ராமன் என்பவர் இயக்குகிறார். இவர் 'இறுதிசுற்று' இயக்குனர் சுதாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த புது படத்தில் கலையரசன், காளி வெங்கட், வர்மா ராமசாமி ஆகிய மூவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். இதில் கலையரசனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க உள்ளார். மேலும், காளி வெங்கட்டுக்கு மதுமிதாவும், வர்மா ராமசாமிக்கு மது ஷாலினியும் ஜோடியாக நடிக்கின்றனர்.


சிவி குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். மேலும் கலையரசன் - காளி வெங்கட் இணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இந்து புதிய படமாகும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: