சென்னை:


கதை...கதையாம்...காரணமாம்... காரணத்தில் ஒரு தோரணமாம் என்பது போல் ஒரு காரணம் வெளிவந்துள்ளது.


என்ன தெரியுங்களா? தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக தான் நடித்த எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்கும் வந்ததில்லை. படத்திற்கு ஒப்பந்தம் போடும்போதே இந்த கண்டிஷனும் அரங்கேறிவிடும்.


இப்போதுதான் அதுக்கு ஒரு காரணம் சொல்றாங்க... நயன் தன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எந்த படமும் இதுவரை ஓடியதே இல்லையாம். ஆனால் அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்தால் படங்கள் செம ஹிட் அடிக்குமாம்.


அதனால்தான் பட ப்ரோமோஷனை நயன் தவிர்த்து வருகிறாராம். இப்படியும் ஒரு காரணமா! அட போங்கய்யா... நீங்களும உங்க சென்டிமென்டும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: