குமரி:
அவரு போனாலே... உங்களுக்கு டெபாசிட் கன்பார்ம்ன்னு வழக்கம்போல நாக்கு என்ற சாட்டையை சுழற்றி தேள் கொட்டு போல் வார்த்தைகளை கொட்டியுள்ளார் தமிழக காங்., தலைவர் இளங்கோவன். அவரு என்ன சொல்லியிருக்காருன்னா?


பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ. கட்சியில் இருந்து விலகினாலே அக்கட்சிக்கு தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் 2015 செப்டம்பர் 27-ந்தேதி காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாக நாகர்கோவில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஞானசேகர் இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார்.


 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துச்சுங்க.. விஜயதாரணி ஆஜராகவில்லை. அவரது வக்கீல்களும் விசாரணைக்கு வரலை. அப்புறம் என்ன டென்ஷனான நீதிபதி விசாரணைக்கு ஆஜராகாத விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு போட்டார் பாருங்க... 


 
இந்நிலையில், விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  நான் வருவேன்னு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ஏற்கனவே வாயில் சனி பகவான் வந்து உட்கார்ந்து கோர்ட் வரைக்கும் இழுத்து விட்டு இருக்கார். அப்பவும் மனுஷன் திருந்தலையே... கோர்ட்டுக்கு வந்த அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
 


‘’ஜெயலலிதா, நரேந்திரமோடியை சந்தித்ததன் நோக்கம் தமிழக மக்களின் நலனுக்காக அல்ல. அவர் மீதுள்ள வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே. பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியில் [பாஜகவில்] இருந்து விலகினாலேதான் அந்த கட்சிக்கு தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்கும்’’ என்று அதிரடித்தார். அப்ப அடுத்த கோர்ட் எதுங்க...
இவரது இந்த பேச்சுக்கு பாஜ கட்சியினர் மத்தியில் இருந்து கடும் கண்டன கணைகள் பாய்ந்து வருகிறது. ஏற்கனவே பாஜ தலைவர் தமிழிசையை தமிழ் வசை என்று சொன்னவர்தானே இளங்கோவன்.... வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே....



మరింత సమాచారం తెలుసుకోండి: