சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எஸ்-3' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை அதிகார பூர்வமாக அறிவிப்பதாக படக்குழுவினர் கூறியிருந்தனர். 


இதன்படி தற்போது இதன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள 'எஸ்-3' திரைப்படம், உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 16-ந்தேதி, வெளியாகவுள்ளதாம். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். 


மேலும் ஹரி இயக்கிய இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், ரோபோ ஷங்கர், ராதாரவி, சூரி, க்ரிஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் மேற்கொண்டுள்ளார். 


மேலும் எஸ்-3 திரைப்படத்தின் டிரைலர், ஆடியோ வெளியீடு தேதி, உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: