சென்னை:
மாஸ்... மாஸ்... பெரிய அளவில் ஹிட் கொடுக்க அட்லீ... முடிவு... விஜய் சந்தோஷம்... என்னங்க... பிட்... பிட்... இருக்கா செய்தி... முழுமையாக பார்ப்போமா!


விஷயம் இதுதாங்க... பைரவா படத்திற்கு பின்னர் விஜய் அட்லீ இயக்கத்தில்தான் நடிக்க போகிறார். இந்த படத்தில்தான் இணைகிறார் ஒரு பெரிய "கை". யார் தெரியுங்களா? கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் என்று தகவல்கள் கசிந்துள்ளது. 


எங்கேயோ... கேள்விப்பட்ட பேராக இருக்கா... பாகுபலியின் கதையாசிரியர்... இயக்குனர் ராஜ மவுலியின் அப்பாதான் இவர்.  விஜயேந்திர பிரசாத் கதை எழுதிய படங்கள்தான் நான் ஈ, மகதீரா, இந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான் போன்றவை எந்தளவிற்கு ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 


இவரைதான் தன் படத்திற்குள் இழுத்து வருகிறார் அட்லீ என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்ப படம் வேற ரேஞ்ச் என்று சொல்லுங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: