விஜய் ஆண்டனியின் வெற்றிகரமான ஹீரோ அவதாரத்தை கண்டு, அம்மன் திரு பிரசாதம் என்கிற பொருள்வரும் பெயர்கொண்ட இளம் இசையமைப்பாளருக்கு ஹீரோவாகும் ஆசைவந்துவிட்டதாம். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் முன்னணியில் இருப்பதால் தான் நடிகராக அறிமுகமாகும் படம் இருமொழிப் படமாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்து,தெலுங்கின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஒருவரை புக் செய்துவிட்டாராம். 


எனவே, இசையமைக்க தனக்கு வருகிற நல்ல வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டு டான்ஸ், ஆக்ஷன், ஆக்டிங் என்று தீவிர பயிற்சியில் மும்முரமாகஇருக்கிறாராம். தனக்கு ஜோடியாக நடிக்க சமந்தத்தை வற்புறுத்துகிறாராம். இசையமைப்பாளராக இருந்தபோதே பிராணிதத்தோடு தன்னை இணைத்து கிசுகிசுக்களை பரப்பியவர் இவர்.


அவரோடு ஜோடி சேர்ந்தால் தன்னையும் இணைத்து காது, மூக்கு,  வைத்து வதந்திகளை உருவாக்குவாரோ என்று சம்மந்தம் தயங்குகிறார். ஆனாலும் கட்டுக்கட்டாக கரன்சிகளை காட்டி சமந்தத்தை சம்மதிக்க வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் அம்மன் திரு பிரசாதம்.            



మరింత సమాచారం తెలుసుకోండి: