தமிழ் சினிமாவில் இது குறும்பட இயக்குநர்களின் சீஸன். ஆண்டுக்கணக்கில் அசிஸ்டெண்ட்டாகப் பணியாற்றி விட்டு அடித்து பிடித்து இயக்குநர் ஆன காலம் போய் ஒரே ஒரு குறும்படத்தில் இயக்குநர் ஆனவர்களைப் பார்த்து வருகிறோம். குறும்பட இயக்குநர்களுக்காக நடிகர் சூர்யா ஒரு போட்டி அறிவித்தார்.

மூன்றே நிமிடங்களுக்குள் யார் அழகாக ஒரு கதையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு பணப் பரிசும், சூர்யாவுடைய 2டி நிறுவனத்தில் கதை சொல்ல ஒரு வாய்ப்பும் வழங்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.இதன் பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் பிரமாண்டமாக நடந்தது. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு தலா 3, 2 ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. ஆனால் கதை சொல்லும் வாய்ப்பு மட்டும் வழங்கப்படவில்லை.

அதைப் பற்றி ஆரம்பத்தில் வந்த விளம்பரங்களில் சொன்னவர்கள் சமீபகால விளம்பரங்களிலும் புரமோஷன்களிலும் அதைப் பற்றிப் பேசவில்லை. அதற்கு பதிலாக மூவருக்கும் சூர்யாவின் நிறுவனத்தில் இண்டெர்ன்ஷிப் வழங்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இண்டெர்ன்ஷிப்பில் பணிபுரிய மூவரில் இருவர் விரும்பவில்லையாம். படம் இயக்கும் கனவில் இருந்தவர்களுக்கு சூர்யாவின் இந்த முடிவு நிச்சயம் ஏமாற்றத்தைத் தந்திருக்கும் என்கிறார்கள்.
click and follow Indiaherald WhatsApp channel