தமிழ் சினிமாவே ஒரு நிமிடம் அசந்துபோகும் அளவுக்கு கோடிக்கணக்கில் விளம்பரத்துக்காக மட்டுமே ஒதுக்கியிருக்கிறது அந்த பிரபல டிவி நடிகர் தரப்பு. எல்லாம் விரைவில் வரவிருக்கும் தன் படத்துக்காகத்தான்.

இது எல்லாம் விதைத்தல் வேலை மட்டும்தான். அறுவடை இனிமேல்தான் என்கிறார்கள். தம்பியின் மொத்த டீம் திட்டமிட்டிருப்பது எல்லாம் தம்பியின் சம்பளத்தை எப்படியாவது ஒரு அஜித், விஜய்க்கு நிகராக்கி விட வேண்டும் என்பதுதான். அதை நோக்கியே அனைத்து திட்டங்கள் எல்லாம் நடக்கிறது.

முக்கியமாக அடுத்து நடிகர் நடிக்கவிருக்கும் ஏலியன் படத்தின் பட்ஜெட் ருபாய் 80 கோடியைத் தாண்டுமாம். எனவே சொந்தத் தயாரிப்பில் இருந்து சற்று விலகி வெளித் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அந்த படத்துக்காகத்தான் இந்த அருமையான தெளிவான காய் நகர்த்தல்கள் என்கிறார்கள்.
click and follow Indiaherald WhatsApp channel