'காக்கா முட்டை' திரைப்படத்தை இயக்கி உலகளவில் பிரபலமான இயக்குனர் மணிகண்டன் தற்போது கைவசம் 2 படங்களை தயாராக வைத்துள்ளார். 


வித்தார்த் நடித்த 'குற்றமே தண்டனை' மற்றும் விஜய் சேதுபதி, ரித்திகா சிங்க் நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகிய இருதிரைப்படங்களையும் இவர் இயக்கி முடித்துள்ளார். இதில் குற்றமே தண்டனை வரும் செப்டம்பரிலும், 'ஆண்டவன் கட்டளை' வரும் அக்டோபர் மாதத்திலும் வெளிவர இருக்கின்றது. 


இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் தற்போது, தனது நான்காவது திரைப்படத்தை இயக்க தயாராகியுள்ளார். 'கடைசி விவசாயி' என்ற திரைப்படத்தை அவர் அடுத்து இயக்கவுள்ளார். இந்த படத்தை 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்கவுள்ளது. 


மேலும் இந்த படத்தில் 70 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது. 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: