விஷால் தற்போது சூரஜ் இயக்கும் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று நாட்களாக, சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்று வருவதை நாம் அறிந்தோம்.
இதையடுத்து, தற்போது வெளிவந்த உண்மை தகவலில், இந்த வாரம் நடைபெறவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில், விஷால் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ளது. மேலும் அவர் வில்லனை, காரில் விரட்டி பிடித்து சண்டையிடப் போவதாக கூறப்படுகிறது.
கத்தி சண்டை திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் வடிவேலு, சூரி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.