கடந்த 9 மாதங்களில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 70 சதவிகிதம் பெரும் பகுதி வரையில் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் பெரிய வெற்றி பெற்ற பின்பு, ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரும் மாற்றமும் கடுமையான கட்டுப்பாடும் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியது போலவே, கடந்த ஏப்ரல் மாதம் ஹெச்-1பி விசா விதிமுறையை மிகவும் கடுமையாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
Image result for h1b visa


கூடவே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நல்ல திறமையான அமெர்க்கர்களையே பணியில் கண்டிப்பாக அமர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகளையும் விதித்தார். இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் யாவும் கடும் சரிவைச் சந்தித்தன.

Image result for h1b visa


இதனை சட்டென்று உணர்ந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் தன்னுடைய கடுமையான முடிவை தடாலடியாக மாற்றிக் கொண்டார். திறமையான ஊழியர்களுக்கு அமெரிக்காவில் எந்த வித கட்டுப்பாடும்  தடையும் விதிக்கப்பட மாட்டாதுஎன்றும் நம்பிக்கை தெரிவித்தார். எச்-1பி விசா விதிமுறைகளில் எந்த ஒரு கட்டுப்பாடும் தற்சமையம் விதிக்கப்படவில்லை என்றும், இன்னும் மறுஆய்வில் தான் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: