தமிழகத்தில் பெய்து வரும் கனமழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்டஇடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து தீர்த்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலும் மழை கொட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது.நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கோவை உக்கடம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.
இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel