
அதிமுக இணைப்புக்கு பின்னர், முதல்வருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து தனித்தனியே தங்கள் கடிதங்களை கொடுத்தனர். இதன் பிறகு, அவர்கள் அனைவரும் கூவத்தூர் பாணியில் புதுவையில் உள்ள ஒரு விடுதியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சமாதானம் செய்யும் நல்ல முயற்சியை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் செய்து வருகிறார். எனினும் அவர்கள் சற்றும் சமாதானம் ஆகவில்லையாம். இந்தநிலையில் இன்று புதுவையில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை டிடிவி தினகரன் இன்று சந்திக்கிறார். அவர்களை கட்டாயப்படுத்தி தினகரன் தரப்பினர் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாடிகிறார்கள் குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel