சீனா:
கோழி, ஆடு என்று ஆரம்பித்து பாம்பு கறி வரை அடித்து சாப்பிடும் சீன மக்கள் இப்போது அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?


சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 நாகப்பாம்புகள் எஸ்கேப் ஆனதுதான் இவர்களின் அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது. (இவர்களை பார்த்து அந்த பாம்புதானேங்க பயப்படணும்.)


ஜியுலாங் என்னும் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை. அவற்றில் 120 பாம்புகள் பிடிபட்டுள்ளன. 37 பாம்புகள் இறந்துவிட்டன. மீதமுள்ள 23 பாம்புகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


 பாம்பு கடித்தால் மருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் மக்கள் அச்சத்தில்தான் மூழ்கி உள்ளனராம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: