சென்னை:
அவர்களுடன் இவரும் சேரந்துள்ளது மிகவும் பெருமையாகி உள்ளது. என்ன விஷயம்ன்னா...


சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நிறைய பேர் வளர்ந்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் லயன்ஸ் கிளப் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்காங்க.


இந்த நிகழ்ச்சியில் அடிப்படை தத்துவமே மாணவர்கள் தங்களை என்று தாழ்த்திக்கொள்ளாமல் படிப்பில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டது. இதற்காக வாழ்க்கையில் சாதனை படைத்து முன்னேறிய மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி காட்டியுள்ளனர். இதைவிட அடுத்ததுதான் ஹைலைட்... 


என்ன தெரியுங்களா? தற்போது சினிமாவில் சாதனை படைத்து வரும் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றையும் காண்பித்துள்ளனர் என்பதுதான். அப்துல்கலாம்... கிரண்பேடி... இவர்கள் வரிசையில் தற்போது ஜாயின்ட் ஆகி பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.


మరింత సమాచారం తెలుసుకోండి: