ஐதராபாத்:
குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஐதாபாத்தில் பெய்த கனமழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


கடலோர ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடந்த 4  நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம், விஜயவாடா நகரில் மழை விட்டு வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில் குறைந்த காற்றழுத்தம் தெலுங்கானா மாநிலம் நோக்கி நகர... அங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் மழையின் வேகம் அதிகரித்து கனமழையாக மாற... சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. 


இந்த மழை இரவு 1 மணி வரை 5 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. சுமார் 7 செ.மீ. மழை பதிவானது. ஐதராபாத் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் முடங்கியது. மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: