புதுடில்லி:
துணிச்சல்... துணிச்சல் என்பதுபோல் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 ஐபோன்களை டிரக்குடன் கடத்திச் சென்ற சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 டில்லி ஒக்லா பகுதியில் இருந்து டவர்கா பகுதிக்கு ஐபோன்களுடன் ஒரு டிரக் கடந்த 13ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த டிரக்கை மறித்த மர்ம நபர்கள் டிரக்கை கடத்தி சென்றனர். இந்த டிரக்கில் ரூ.2 கோடி மதிப்புள்ள 900 ஐ போன்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்த புகாரின் பேரில் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் இந்த டிரக்கை கடத்தியவர் பற்றி தெரிய வந்தது.


இதையடுத்து அலம்(24), அர்மன்(22) ஆகியோர் கூட்டுச் சேர்ந்து டிரக்கை கடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 900 ஐபோன்களையும் மீட்டனர். இந்த சம்பவம் டில்லி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Find out more: