சென்னை:
கை கொடுத்துள்ளார்... கை கொடுத்துள்ளார் தனது மச்சினிக்கு என்று கோலிவுட் செய்தியை உரக்க சொல்லிவிட்டார் உளவாளி உலகநாதன். என்ன விஷயம் என்றால்!
கோலிவுட் கடந்த வாரம் அதிர்ச்சியில் உறைந்து போனது காரணம் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா விவாகரத்து முடிவு செய்திதான். இன்று வரை இதுதான் ஹாட் டாபிக்காக உள்ளது.
எது எப்படி இருந்தால் என்ன? நான் என் நிலையில் இருந்து மாற மாட்டேன் என்று தனது அடுத்த படத்தை ஸ்டார்ட் செய்யும் பணிகளில் குதித்து விட்டாராம் சௌந்தர்யா... இவருக்கு கைகொடுத்துள்ளது யார் தெரியுங்களா? அவரது அக்கா கணவர் தனுஷ்தான்.
சௌந்தர்யா இயக்க உள்ள படத்திற்கு கதையை தனுஷ் தான் எழுதி கொடுத்துள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
பேரு என்ன தெரியுங்களா? “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. எப்படி இருக்கு தலைப்பு!