டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு முழுவதுமாகஓரம் ஒதுங்கியுள்ளார். ஒற்றுமையாக இருங்கள் என்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி அறிவிப்பு தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் ஓ.பன்னீர் செல்வம். கட்சி இரண்டாக உள்ளுக்குள் பிளவு பட்டது.
இந்த சூழ்நிலையில் சசிகலாவும் சிறைக்கு செல்லவே அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் அவரது சொந்தக்காரர் டிடிவி தினகரன். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தலைமையில் பதவியேற்றார். ஆனால் டிடிவி தினகரனின் தலையீடு அதிகம் இருக்கவே, கொங்கு மண்டல அமைச்சர்கள் மிண்டும் போர்க்கொடி உயர்த்தினர்.

இதன் உச்சக்கட்டமாக அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை விலக்கி வைப்பதாக முடிவு எடுத்தனர். இதற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel