புதிய தலைமுறை டிவிக்கு ஜெ.தீபா சிறப்பு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய சூழலில் தமிழக அரசு நல்ல விதமாக சுதந்திரமாக செயல்பட வில்லை. மக்களும் ஆட்சியாளர்கள் மீது ரொம்ப வெறுப்புடன் உள்ளனர். எனவே ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்துவது தான் சரியான திர்வாக இருக்கும்.
![]()
ஒரு அரசியல் தலைவர் இறந்த பின்னர் அடுத்து அவர்கள் வாரிசு வருவது இயற்கையாக நடப்பது தான். நான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு.என்னை முதல்வராக்கினால் ஜெயலலிதா போல் ஆளுமை மிக்கவராக செயல்பட்டு நிறைய பணிகளை செய்வேன் என்று தீபா கூறியுள்ளார்.

என் தொண்டர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன், பின்வாங்க மாட்டேன் என்று பேட்டியில் வெளுத்துக்கட்டினார் தீபா
click and follow Indiaherald WhatsApp channel