குடிபோதையில் வந்து உறவுக்கு அழைத்த கணவனை, கொலை செய்த மனைவி பிணத்தை பிரிட்ஜில் வைத்த சம்பவம் திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.திருத்தணி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த முருகேசன் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து அவரது மனைவி முனியம்மாளை உறவுக்கு அழைத்து அடித்து வந்துள்ளாராம்.

ஒருநாள் கணவருக்கு உடல்நலமில்லை என்று கூறி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார் முனியம்மாள், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.முருகேசனின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் முனியம்மாளை விசாரணை செய்தபோது முருகேசன் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமை செய்ததால் அண்ணனின் உதவியுடன் கொலை செய்து பிணத்தை பிரிட்ஜில் வைத்ததாகவும், இறந்து விட்டதாக பொய்சொல்லி மருத்துவமனைக்கு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்ற போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel