ரியோ டி ஜெனிரோ:
இந்தியாவின் கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கி உள்ளது ரியோவில். என்ன விஷயம் என்றால்...


ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தங்கள் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.


ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை 3-2 என வென்ற இந்தியா, அடுத்து ஜெர்மனியிடம் வீழ்ந்தது.


இதனால் வீருகொண்டு எழுந்து தனது 3வது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை துவம்சம் செய்துள்ளது. 8வது நிமிடத்தில் இந்தியாவின் சிங்லென்சனா ஒரு கோல் அடிக்க, 35வது நிமிடத்தில் கோத்தாஜித் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி வலுவாக தனது கால்களை ஊன்றியது. 


எதிரணி சார்பில் கொன்ஜாலோ (49வது நிமிடம்) மட்டும் பதிலடி தந்தார். இருந்தாலும் இந்திய அணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாதநிலையே எதிரணிக்கு ஏற்பட்டது.


இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில், வலிமையான நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: