மும்பை:
அட அந்த படத்தோட ரீமேக்கே இல்லை... இல்லை என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறைதான். எதற்காக இந்த சத்தியம்ன்னா?


தமிழில் விஜய் சேதுபதிக்கு செமத்தியாக பிரேக் கொடுத்து உயர்த்தி விட்ட படங்களில் சூதுகவ்வும் படமும் ஒன்று. நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். 


இந்த படம் தற்போது பாலிவுட்டில் கோல்மால் 4 என்ற பெயரில் ரீமேக் செய்ய போறாங்கன்னு ஒரு தகவல் உலா வர பாலிவுட்காரங்க டென்ஷன் ஆகிட்டாங்களாம். 


இந்த ரீமேக் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்க அஜய் தேவ்கன் அதில் நடிப்பார் என்று தகவல் பரபரக்க அப்படியெல்லாம் இல்லவே இல்லைன்னு மறுத்துள்ளது படக்குழு. கோல்மால் 4'காக கதை உருவாகி வருவது உண்மைதான். ஆனால் சூது கவ்வும் படத்தின் ரீமேக் இல்லை என்று ஒரே போடாக போட்டுவிட்டனர். ஓகே...ஓகே... டோண்ட் டென்ஷன்.


మరింత సమాచారం తెలుసుకోండి: