சென்னை:
இதுவரை மறைத்து மறைத்து வைத்திருந்ததை நேற்று இரவு வெளியிட்டுள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?


கார்த்தி நடித்து வந்த காஷ்மோரா படத்தை பற்றி எந்த விஷயமும் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. நீண்டகாலமாக படப்பிடிப்பு நிலையில் இருந்து வந்த இந்த படம் தீபாவளிக்கு வரும் என்று தகவல்கள் வெளியானது. இருப்பினும் இதுகுறித்து படக்குழுவினர் எவ்வித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.


சமீபத்தில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொட்டைத் தலையுடன் போர் பின்னணியில் ஆக்ரோஷமாக உருமும் கார்த்தியை வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ளனர். அப்போ... இதுவும் பாகுபலி போல் வரலாற்று படமா? சொல்லுங்கப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: